தென் சவூதி அரேபியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் வியாழக்கிழமை இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 25 பேர் பலியானதுடன் 107 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தீயானது மேற்படி ஜஸான் பிராந்திய பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை மற்றும் மகப்பேற்று பிரிவுகளில் பரவியுள்ளது.
தற்போது தீ அணைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் பிறிதொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தீயை அணைக்கும் நடவடிக்கையில் 21 பாதுகாப்புக் குழுக்கள் பங்கேற்றன.
இந்நிலையில் இந்த தீ அனர்த்தத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜஸான் பிராந்தியமானது ஹொதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி ஆதரவு படையினருக்குமிடையே பல மாத காலமாக மோதல்கள் இடம்பெற்று வரும் யேமனிய எல்லைக்கு அண்மையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வார ஆரம்பத்தில் யேமனிலிருந்து ஜஸான் பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையொன்று சவூதி அரேபியாவால் குறுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் குடியி ருப்புக் கட்டடமொன்றில் இடம் பெற்ற தீ அனர்த்தத்தில் சிக்கிய 10 பேர் பலியான து டன் 259 பேர் காயமடைந்திருந்தனர்.
0 comments:
Post a Comment