இந்திய உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே கிண்ணத்தில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நேற்று பெங்களுரில் விஜய் ஹசாரே கிண்ணத்தின் 2ஆவது காலிறுதிப் போட்டியில் டெல்லி- ஜார்க்கண்ட் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோனி 70 ஓட்டங்கள் எடுத்தும் ஜார்க்கண்ட் அணி தோல்வியைத் தழுவியது.
இருப்பினும் இந்தப் போட்டியில் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
டெல்லி அணியின் ஷிகர் தவானை விக்கெட் காப்பாளராக தோனி 27 ஓட்டங்களில் ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார்.
இதன் மூலம் ஆசிய கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் (208) செய்த விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை பெற்றார்.
2ஆவது இடத்தில் பாகிஸ்தானின் கம்ரான் அக்மலும், 3ஆவது இடத்தில் இலங்கையின் குமார் சங்கக்காரவும் உள்ளனர்.
0 comments:
Post a Comment