இந்திய -− பாகிஸ்தான் இடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு முன்னாள் இந்திய தலைவர் செளரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொட ரை நடத்துவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவி வரும் நிலையில் கங்குலி மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்போதுமே விறுவிறுப்பானதாக இருக்கும்.
அதற்கு இரு நாட்டு ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பு இருக்கும்.
தனிப்பட்ட முறையில் நான் அந்தத் தொடருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். எனினும் தொடரை நடத்துவதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை அகற்ற வேண்டியுள்ளது என்றார்.
யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியிருப்பது குறித்துப் பேசிய கங்குலி, “வயதைவிட வீரர்களின் செயல்பாடே முக்கியம்.
தொடர்ந்து சிறப்பாக ஆடும்பட்சத்தில் அணியில் தொடர்ந்து நீடிக்கலாம்” என்றார்.
0 comments:
Post a Comment