செம்சங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்படுவதாகவும், இந்த அம்சத்துக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்சங் கெலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அறிமுகமாக சில மாதங்கள் உள்ள நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வலம் வரத்துவங்கியுள்ளன.
2019-ம் ஆண்டில் செம்சங் நிறுவனத்தின் முதல் “ஃபிளாக்ஷிப்” ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவிருக்கும் கெலக்ஸி எஸ்10 மொடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்க செம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி கெலக்ஸி எஸ்10 “இன்-டிஸ்ப்ளே” கைரேகை சென்சர் கொண்ட செம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்-டிஸ்ப்ளே” கைரேகை சென்சர் தவிர கெலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் 3D முக அங்கீகார தொழில்நுட்பம் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்காக செம்சங் நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த “மான்டிஸ்” எனும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்களும் இணைந்து ஐபோன் X சாயலில் வழங்கப்பட்டதை போன்ற முக அங்கீகார வசதியை உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் செம்சங் தனது எஸ்10 மாதிரியில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கிவிட்டு, 3D முக அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்கும் என கூறப்படுகிறது. கெலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் வழங்குவதற்கான மாதிரி பாகங்களை உதிரிபாக நிறுவனங்களிடம் செம்சங் முன்பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
“இன்-டிஸ்ப்ளே” சென்சர் மற்றும் 3D முக அங்கீகார தொழில்நுட்பங்களை புதிய ஸ்மார்ட்போனில் வழங்கும் பட்சத்தில் செம்சங் நிச்சயம் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை சேர்க்கும் பட்சத்தில் புதிய ஸ்மார்ட்போனில் ஏ.ஆர். எமோஜி அம்சம் இடம்பெறலாம்.
Pupils by:- infonews1st
MHM.Anees
0 comments:
Post a Comment