திருகோணமலை ஐந்தாம் கட்டைப் பகுதியில் முப்பது மில்லிகிராம் ஹெரோயினை வைத்திருந்த நபர் ஒருவரை புதன்கிழமை (30)மாலையில் கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பிரதேசத்தின் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையானவர் ஒருவரே இவ்வாறு ஹெரோயினை வைத்திருந்த போது கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 48வயதுடைய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment