குழந்தைகள் ஏன் அழுகிறது என்று கண்டுபிடிக்க தாய்வான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய அன்ட்ரொயிட் (android) மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மொபைல் ஆப் இரண்டு ஆண்டுகளின் கடின உழைப்பில் உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
100 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை இந்த மொபைல் ஆப்ளிகேஷனில் பதிவு செய்து வைத்துள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரையும் 2 இலட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சத்தங்களை சேகரித்து இருக்கிறார்கள்.
அவற்றின் அடிப்படையில், இந்த அப்ளிகேஷன் குழந்தை ஏன் அழுகிறது? என்பதை தீர்மானிக்கிறது.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை சரியாக சொல்லிவிடும் இந்த அப்ளிகேஷன் 92 சதவீதம் வரை துல்லியமாக உள்ளது.
The Infant Cries Translator என்ற இந்த அப்ளிகேஷன் ஆப்பிள், அன்ட்ரொய்ட் (android) கருவிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment