முழங்கால் பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயம் சுகம் பெறாத நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு நியூஸிலாந்துடனான ஒருநாள் தொடரில் முழுமையாக விளையாட முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர், நவம்பரில் மேற்கிந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின்போதே மாலிங்வுக்கு காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீளாத நிலையிலும் மாலிங்க தொடர்ந்து இலங்கை அணியில் நீடிப்பதோடு மேலதிக வீரராக திஸ்ஸர பெரேரா இலங்கை அணியுடன் நியூஸிலாந்தில் இணைகிறார்.
இந்நிலையில் மாலிங்க நாளை 26 ஆம் திகதி நடைபெறும் நியூஸிலாந்துடனான முதலாவது ஒருநாள் போட்டி மற்றும் 28 ஆம் திகதி நடக்கும் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்பதிலும் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
“அவர் ஒரு நாள் தொடர்களில் விளையாட வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்ட இலங்கை அணி முகாமையாளர் ஜெர்ரி வுட்டர்ஸ், “முழங்காலில் அவர் சிறு அசவ்கரியத்தை உணர்கிறார். அவர் ஒரு நாள் போட்டியில் வைத்து விளையாடுவாரா அல்லது இருபது-20இல் வருவாரா என்பது தெரியவில்லை” என்றார்.
இலங்கை அணியில் இணைக்கப்பட்ட வீரர்களில் விளையாட முடியாத நிலைக்கு முகம் கொடுத்திருக்கும் மூன்றாவது வீரர் மாலிங்க ஆவார். தம்மிக்க பிரசாத் ஏற்கனவே காயம் காரணமாக அணியில் இருந்து விலகியதோடு குசல் பெரேரா உக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் விளையாட தற்காலிக தடைக்கு உள்ளானார்.
மாலிங்க இல்லாதது இலங்கை அணிக்கு பெரிய இழப்பாகும் என்று நியூஸிலாந்து பயிற்சியாளர் கிரேக் மக்மிலன் குறிப்பிட்டுள்ளார். “மாலிங் கடந்த பல ஆண்டுகளாக இலங்கை அணிக்கு பாரிய பங்களிப்புச் செய்தவர். அவர் அந்த அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர். அவர்கள் இழப்பை சந்தித்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். எனினும் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு இதனைக் கொண்டு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது” என்றும் மக்மிலன் குறிப்பிட்டுள்ளார்.
மாலிங்க இலங்கை இருபது-20 அணியின் தலைவராவார். இந்நிலையில் மாலிங்க இருபது-20 அணியில் இடம்பெறாத பட்சத்தில் அணியை யார் விழி நடத்துவார் என்பது குறித்து தேர்வுக் குழுவினர் இதுவரை கருத்து வெளியிடவில்லை.
0 comments:
Post a Comment