சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டுப் பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த 8 பேரும் குதிரைமலை, பூக்குளம் மற்றும் பத்தளக்குண்டு ஆகிய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை மன்னார் மற்றும் புத்தளம் மீனவ பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment