வட கிழக்கு மக்களுக்களின் குடிநீர் தேவை விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்,அவர்கள் நீண்ட காலமாக குடிப்பதற்கு நல்ல நீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி பாராளமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு, நகரத்திட்டமிடல் நிர்மாணத்துறை அமைச்சுகளுக்கான குழுநிலை விவாத்த்தின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார் அவர் மேலும் அங்கு உரையாற்றும் போது வடக்கிலும்,கிழக்கிலும் உள்ள மக்களிடையே உள்ள மிகப் பெரிய பிரச்சினை சுத்தமான குடி நீர் இன்மையாகும்,அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை நீர்தேக்கத்தில் இருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது, ஆனால் உன்னிச்சையை அன்மித்த அயல் கிராமங்கள் இதுவரைக்கும் நல்ல குடிநீர் வழங்கப்படாமை அந்தப்பிரதேசத்து மக்களுக்கு செய்கின்ற அநியாயமாகும், எனவே கிராமிய நீர்வழங்கல் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த மக்களுக்கு மிகவிரைவாக குடிநீரை பெற்றுக்கொள்ள உதவ வேண்டும்.
அவ்வாறே படுவான்கரை பிரதேசத்து மக்கள் ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரைக்குமான காலப்பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையை எதிர்கொள்கின்றார்கள் இவ்வாறே கல்குடா,நாவலடி,வாகரை போன்ற பிரதேசங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு அதிகம் காணப்படுகிறது இந்தப்பிரதேசத்து மக்கள் தூய்மையற்ற அசுத்தமான மாசடைந்த நீரினை அருந்துவதன் மூலம் சிறுநீரக நோயினால் இலகுவில் பாதிக்கப்படுகின்றனர் அவ்வாறே சிறுவர்கள் , முதியவர்கள் போன்றோர் மிக இலகுவில் நீரினால் பரவுகின்ற நோய்களினால் தாக்கப்படுகின்றனர், எனவே பரவலாக எமது வட கிழக்கு மக்கள் அனுபவிக்கின்ற இந்த குடி தண்ணீர் பிரச்சினைக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சரான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் விரைவில் தீர்வினை பெற்றுத்தர வேண்டும்.
கடந்த மே மாதம் கல்குடாவில் மாவடிச்சேனை பிரதேசத்தில் அப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் நன்மை கருதி குடிநீர் வழங்கும்முகமாக தண்ணீர்க்குழாய்கள் பதிக்கப்பட்டன, அந்த நிகழ்வில் கெளரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்து கலந்து கொண்டார்கள், ஆனால் இன்னும் பதிக்கப்பட்ட குழாய்களுக்கூடாக குடிநீர் வரவில்லை.
இவ்வாறே மன்னார் முசலிப்பிரதேசத்து மக்களுக்கான குடிநீர்த்தேவையும் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது, எனக்கு நம்பிக்கை இருக்க்கிறது எதிர்காலத்தில் இந்த மக்களின் குடிநீர்ப்பிரச்சினையை தீர்ப்பதில் பாகுபாடுகள் இல்லாமல் கெளரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அவசரமாக செயல்படுவார்கள் என்று, அத்தோடு தாகத்தில் கிடக்கும் இந்த மக்களின் தாகத்தை தணிப்பதற்கான நல்ல குடிநீரை வழங்குவது நன்மை பயக்கும் விடயமாகும் என்றும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment