திருகோணமலை, மிரிஸ்வெவ பகுதியில் 13 வயதுச் சிறுமியொருவரை தாக்கிய 35 வயதுடைய பெண்னை இன்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான சிறுமி மகாதிவுள்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி சிறுமியின் வீட்டுக்கு அருகிலுள்ள இப்பெண் நேற்று (27) மாலை தாக்கியமை தொடர்பில் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் அச்சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இப்பெண்ணை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். கைதுசெய்யப்பட்ட பெண்னிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
0 comments:
Post a Comment