சாரதிக்கு 10 வருடச் சிறை
பழ வகைகள், இனிப்புப் பண்டங்களை வழங்கி 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பஸ் சாரதி ஒருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி வஸன்த ஜினதாஸ 10 வருட சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடும் வழங்குமாறு பணிப்புரை வழங்கினார். அதற்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்துமாறும் தீர்ப்பளித்தார்.
பலாங்கொடை எல்லபொல சுணில் மாவத்தையில் வசிக்கும் செல்லதொரே லக்ஷ்மன் என்ற பஸ் சாரதியே இந்த தண்டனைகளுக்கு உள்ளானவராவார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 07 ஆம் திகதி சிறுமி பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்ல பஸ் நிலையத்தில் இருக்கும் போது சந்தேக நபரான சாரதி சிறுமியை பஸ் நிலையத்திலுள்ள மலசலகூடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்ததாக சாட்சியங்கள் மூலம் உறுதியாகியது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்துவந்த பின்னர் நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கினார்.
0 comments:
Post a Comment