கோதுமை மாவின் விலையை ரூபா 2 இனால் அதிகரித்துள்ளதாக தேசிய கோதுமை மா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தேசத்தை கட்டியெழுப்பும் வரியாக அறவிடப்படும் 2% வரியை மா விற்பனை முகவர்களிடமிருந்து, தேசிய கோதுமை மா நிறுவனங்கள் அறவிடுவதால், மா விற்பனை முகவர்களால் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூபா 2 இனை அறவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் தற்போது கோதுமை மாவின் நிர்ணய விலை ரூபா 90 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், ரூபா 87 ஆக இருந்த ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூபா 89 ஆக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலை அதிகரிப்பு கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலாவதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரிகள் யாவும் ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த விலை அதிகரிப்பின் காரணமாக தங்களது பேக்கரி தயாரிப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment