பெண்களை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். பின்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது சிம்பு, அனிருத் ஆகியோரின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் பெண்களை இழிவுபடுத்தி பாட்டு பாடிய நடிகர் சிம்பு, அந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் போலீசார் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment