தன் மீதான முறைப்பாட்டை இரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் கடந்த வாரம் இணை
யதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது கோவை ரேஸ்கோர்ஸ் பொலிஸ் நிலையத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பெண்களை இழிவு படுத்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் முறைப்பாடு செய்யப்பட்டதோடு இருவரையும் இன்று டிசம்பர் 19 ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவிட்டனர். இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளை இரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு, குறித்த விசாரணையை ஜன
வரி 3 ஆம் திகதிக்கு ஒத் திவைத்துள்து.
0 comments:
Post a Comment