பாலகன் ஒருவன் துப்பாக்கி ரவைகளைக் கொண்ட பட்டியை உடலில் ஏந்தியவாறு ஏ.கே. 47 துப்பாக்கியொன்றுக்கு அருகில் நிற்பதையும் பிறிதொரு பாலகன் துப்பாக்கியொன்றை மடியில் ஏந்தியவாறு எச்சரிக்கை விடுப்பதையும் வெளிப்படுத்தும் புதிய காணொளிக் காட்சியொன்று ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது..
இந்தக் காணொளிக் காட்சியானதுஐ.எஸ். தீவிரவாதிகளால் இதற்கு முன் வெளி யிடப்பட்ட காட்சிகள் போன்று நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மேற்படி காணொளிக் காட்சி தீவிரவாதிகள் தொடர்பான இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
0 comments:
Post a Comment