மஹியங்கணை ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தனது படுக்கையில் வைத்திருந்த பணப்பை (Purse) மற்றும் ரூபா 5,000 பெறுமதியான மோதிரம் ஒன்றை திருடிச் சென்ற ஒருவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரியுள்ளனர்.
குறித்த பணப்பையில் இருந்த வங்கி ATM அட்டையை பயன்படுத்தி, மஹியங்கணை நகரிலுள்ள வங்கியின் ATM இயந்திரத்திலிருந்து 4 தடவைகளில் ரூபா 29,815 இனை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை செய்யும் மஹியங்கணை பொலிஸார், குறித்த நபர் பற்றி தகவல் தெரிந்தால் தங்களுக்கு அறிவிக்குமாறு, பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்: 055 2257222, 055 2258390, 077 3553278
0 comments:
Post a Comment