புது வருடம் மற்றும் பண்டிகைக் காலமாகிய தற்போது, வர்த்தக நிலையங்கள் நிறைந்து வழிகின்ற சந்தர்ப்பத்தில், இங்கிரிய நகரத்திலுள்ள பாதணி கடையில் இடம்பெற்ற களவுச் சம்பவத்தில் குழந்தை ஒருவரை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிறு தினமான நேற்று (20) வாடிக்கையாளர்கள் அதிகம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில், தனது குழந்தைகளுடன் கடைக்கு வந்த தாய் ஒருவர், அக்குழந்தைகளில் ஒருவரைக் கொண்டு களவாடச் செய்துள்ளார்.
இதன்போது ரூபா 55,000 பணம் களவாடப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நடைபெற்ற வேளையில் குறித்த காட்சிகள் வர்த்தக நிலையத்திலுள்ள பாதுகாப்பு கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குழந்தை, வர்த்தக நிலையத்தின் பணம் அடங்கிய இலாச்சியை திறக்க முயல்கின்றதோடு, அக்குழந்தையால் அதை திறக்க முடியாமல் போகின்றது.
இதன்போது, குறித்த தாய் அந்த இலாச்சியை திறந்து கொடுக்கின்றார், அதன் பின்னர், அக்குழந்தை அந்த இலாச்சியினுள் கையைவிட்டு பணத்தை எடுக்கின்ற காட்சிகள், கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிக சனம் நிறைந்த வேளையில், இடம்பெற்றுள்ள இச்சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment