சக்தி வாய்ந்த மின் கம்பியொன்றில் மின்னோட்டத்தைப் பாய்ச்சி கொம்பன் யானையொன்றைக் கொலை செய்த குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ மாவட்ட நீதிமன்ற நீதிபதி புத்தினி அமரசூரிய உத்தரவிட்டார்.
வலகம்பாகுவ, மரதன் கடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரெ இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். இவரது சோழச் சேனைக்குள் நுழைய முனைந்த போதே குறித்த கொம்பன் யானை இவரால் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்ததாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சுமார் ஒரு அடி நீளம் கொண்ட கொம்புகள் உள்ள இந்த யானை முப்பது (30 வயதுடையதாகும் இதன் உயரம் 12 அடியாகும். இந்த யானை இறந்த விடயம் கிராம வாசிகளுக்கு தெரியவரவே சந்தேக நபர் வெளியில் தென்படாமல் வீட்டுக்குள் ஒழிந்திருந்துள்ளார்.
குறித்த கொம்பன் யானையை திட்டமிட்டு கொன்றுவிட்டு அதன் கொம்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சந்தேக நபருடன் யானையை கொல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்ப்ப்படும் மின்சாரம் பாய்ச்சப் பயன்படுத்தப்பட்ட கம்பி, வயர் என்பனவற்றையும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
0 comments:
Post a Comment