இலங்கைக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் அதிரடியாக விளையாடினார். குலசேகரா வீசிய 2–வது ஓவரில் ஒரு சிக்சர்இ 2 பவுண்டரி எடுத்த அவர் 3–வது ஓவரில் 27 ஓட்டங்கள் சேர்த்தார்.
குப்தில் 12 பந்தில் 46 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் அவர் தென் ஆபிரிக்காவின் டிவில்லியர்சின் அதிவேக அரை சதம் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை தவறவிட்டார். குப்தில் 17 பந்தில் 50 ஒட்டங்களை தொட்டார். டிவில்லியர்ஸ் 16 பந்தில் அரை சதம் அடித்ததே சாதனையாக உள்ளது.
இதை முறியடிக்க குப்திலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அவர் அதிவேக அரைசதம் அடித்த 2–வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இலங்கை வீரர்கள் ஜயசூர்யஇ குசால் பெரேரா ஆகியோரும் 17 பந்தில் அரைசதம் அடித்துள்ளனர்.
ஒரு நாள் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு நியூசிலாந்து தலைவர் மெக்கல்லம் 18 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார். நியூசிலாந்து 2.4 ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது. இது ஒரு அணி அதிவேகமாக 50 ஓட்டங்களை எடுத்ததாகும்.
இதற்கு முன்பு நியூசிலாந்து 3.3 ஓவரில் 50 ஓட்டங்களை (2007) ஆண்டு பங்களாதேசத்துக்கு எதிராக) எடுத்து இருந்தது. தனது சாதனையை அந்த அணியே முறியடித்தது.
நியூசிலாந்து அணி 250 பந்துகள் மீதம் உள்ள நிலையில் வெற்றி பெற்றது. இது ஒருநாள் போட்டியில் அதிக மீதமுள்ள பந்தில் பெற்ற 7–வது வெற்றியாகும்.
0 comments:
Post a Comment