ஆப்கானிஸ்தானின் ஹெல்மான்ட் மாகாணத்தின் மற்றுமொரு மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
சன்கின் மாவட்டத்தின் பொலிஸ் தலைமையகம் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருப்பதோடு அந்த மாவட்டத்தின் மற்றுமொரு பாகத்தில் தொடர்ந்து மோதல் இடம்பெறுவதாக ஆப்கான் அதிகாரிகள் நேற்று குறிப்பிட்டுள்ளனர்.
ஹெல்மான்ட் மாகாண பிரதி ஆளுநர் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு பேஸ்புக் பக்கத்தில் எழுதிய திறந்த மடலில், மாகாணத்தை பாதுகாக்க மத்திய அரசு போதிய ஆதரவு வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார். முழு மாகாணமும் தலிபான்களிடம் வீழும் வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரித்திருந்தார்.
தற்போதைய மோதல்களில் குறைந்தது 90 ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெல்மான்ட் மாகாணத்தில் தலிபான்கள் அண்மைய மாதங்களில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றபோதும் அங்கு போதிய படையினர் குவிக்கப்படாமலும் வெடிபொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதாலும் அரச படையினரால் தலிபான்களை எதிர்த்து நிற்க முடியாத நிலை உள்ளது.
0 comments:
Post a Comment