சிரியாவின் இத்லிப் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்தியதாக நம்பப்படும் வான் தாக்குதல்களில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சந்தைப்பகுதி, வீடுகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் என்று அனைத்தும் தாக்கப்பட்டிருப்பதாக செயற்பாட்டளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாக சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த தாக்குதல்களின் முக்கிய இலக்குகள் அரச-எதிர்ப்புக் கிளர்ச்சியாளர்களின் நிலைகள் என்றும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆயுததாரிகள் என்றும் சிரிய மோதல்களைக் கண்காணிக்கும் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் குறிப்புணர்த்தியுள்ளது.
கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற இந்த தாக்குதல்கள் குறித்து ரஷ்ய தரப்பு உறுதிசெய்யவில்லை. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக ரஷ்யா கடந்த செப்டெம்பர் தொடக்கம் சிரியாவில் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அரச எதிர்ப்பு இஸ்லாமிய கிளர்ச்சியாளர் கூட்டணி ஒன்று இந்த ஆண்டு ஆரம்பத்தில் இத்லிப் நகரை கைப்பற்றி இருந்தது.
0 comments:
Post a Comment