சீனா பிரபல சாங்காய் டிராகன் டிவி சேனலில் முதன்முறையாக ரோபோவை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த டிவியில் வழக்கமாக வானிலை அறிவிப்புகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த
வானிலை அறிவிப்பு நேரலை நிகழ்ச்சிக்கு செயற்கை அறிவு கொண்ட பெண் ரோபோவை தயாரித்து, அந்த ரோபோ தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறது. இது தொலைக்காட்சி நிறுவனங்களின் தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வு உலக தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு வேலை இல்லாமல் போகும் நிலை உருவாகுமா? என்ற கேள்வியும் தற்போது எல்லா தொகுப்பாளர் மத்தியிலும் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment