புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கை இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போது மன்றில் சமர்ப்பிக்கப்படுமென தெரியவருகின்றது.
கடந்த மே மாதம் குறித்த மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலி ஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் தொடர்பான வழக்குகள் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றது.இந்நிலையிலேயே அவர்கள் தொடர்பான விசாரணை வழக்கு இன்றைய தினம் மன்றில் எடுத்துக் கொள்ளப்படும்போது குறித்த மாணவியின் உடலில் இருந்து மீட்கப்பட்ட மரபணு அறிக்கைகள் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த படுகொலை தொடர்பில் மேலும் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை துரிதப்படுத்தும் வகையில் அவர் உட்பட மேலும் இருவர் கொழும்பு மகசின் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment