பாவனைக்குதவாத கோழி இறைச்சி விற்பனை செய்த ஒருவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர் கே.ஜெய்சங்கர் தெரிவித்தார். |
மட்டக்களப்பு மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்களான கே.ஜெய்சங்கர், த.ரவிசங்கர் தர்மா ஆகியோர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறிப்பிட்ட உணவகத்தில் மனித பாவனைக்குதவாத நிலையில் கோழி இறைச்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர் கே. ஜெய்சங்கர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment