காற்று மாசுபாடு அதிகரித்துள்ள காரணத்தால் சீன மக்களுக்கு இரண்டாவது முறையாக சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உலக அளவில் தொழில்துறையில் முன்னிலை வகித்து வரும் சீனாவில்,தொழில் வளர்ச்சியோடு சேர்த்து, அங்குள்ள காற்றும் பெரியளவில் மாசடைந்து வருகிறது.
அதிகரித்து வரும் வாகன பயன்பாடு மற்றும் பெருகி வரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை ஆகியவற்றால் சீனாவின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, சீனத் தலைநகர் பீஜிங்கில் முதன் முறையாக காற்று மாசுபாடு காரணமாக இம்மாத ஆரம்பத்தில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது.
அப்போது பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமான பணிகளுக்கு தடை, போக்குவரத்தில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல தடைகளை அந்நாட்டு அரசு விடுத்திருந்தது. அதன்பின்னர், அவை விலக்கிக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக கூறி, தொடர்ந்து நான்கு நாட்கள் அவதானத்துடன் இருக்குமாறு சீன மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றை சுவாசிக்க முடியாமல் தவிக்கும் சீன மக்களின் நிலையை சாதகமாக பயன்படுத்தியுள்ள விடாலிட்டி ஏர் என்ற கனடா நாட்டு நிறுவனம் பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை போத்தலில் அடைத்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது.
|
About infonews1st.blogspot.com
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment