உண்மையின் உதயம்

infonews1st

பீப்' பாட­லுக்கு கருத்து கேட்­டதால் கோப­ம­டைந்த இளை­ய­ராஜா

சிம்­புவின் 'பீப்' பாடல் குறித்து கேள்வி எழுப்­பிய செய்­தி­யா­ள­ருக்கும் இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வுக்கும் இடையே வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­மையால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.
கன­ம­ழையின் போது வெள்ள மீட்­புப்­ப­ணியில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்­கான நன்றி அறி­விப்பு நிகழ்ச்சி சென்னை எத்­திராஜ் மகளிர் கல்­லூ­ரியில் நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.
இந் நிகழ்வில், இசை­ய­மைப்­பாளர் இளை­ய­ராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரு வெள்­ளத்தில் சிக்­கி­ய­வர்­களை மீட்­டெ­டுத்து உத­விய தன்­னார்வ அமைப்­புகள் மற்றும் தனி­ந­பர்­க­ளுக்கு சான்­றி­தழ்கள் வழங்கி பாராட்டு தெரி­வித்­தனர். இந்­நி­கழ்ச்சியின் பின்னர் செய்­தி­யா­ளர்­களை இளை­ய­ராஜா சந்­தித்தார். அப்­போது சிம்­புவின் 'பீப்' பாடல் குறித்து இளை­ய­ரா­ஜா­விடம் செய்­தி­யாளர் ஒருவர் கேள்வி எழுப்­பினார்.
இதனால் கோப­ம­டைந்த இளை­ய­ராஜா, ''உனக்கு ஏதா­வது இருக்கா? அந்தப் பிரச்­சி­னைக்­கா­கவா வந்­தி­ருக்கோம். உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்­கி­ற­துக்கு பதில் சொல்லு'' என்று எதிர் கேள்­விகள் எழுப்பி வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.
செய்­தி­யா­ள­ருடன் இளை­ய­ராஜா வாக்­கு­வாதம் செய்­ததால் அங்கு சிறிது நேரம் பர­ப­ரப்பு நில­வி­யது. அதன் பின்னர் சில தன்­னார்­வ­லர்கள் இளை­ய­ரா­ஜாவை சமா­தானம் செய்து அங்­கி­ருந்து அனுப்­பி­வைத்­தனர்.
Share on Google Plus

About infonews1st.blogspot.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment