மட்டக்களப்பு நகரில் தூசுகள் படிந்த நிலையில் அடைக்கப்பட்டிருந்த பெருந்தொனையான குடிநீர் போத்தல்களை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் போத்தல் ஒன்றை பொதுமகன் ஒருவர் வாங்கிச்சென்று அருந்தியபோதே இது கண்டுபிடிக்கப்பட்டு வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸாருடன் இணைந்து வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையில் சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையினை தொடர்ந்து பெருமளவான குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது ஒரு லீற்றர் கொள்ளளவைக் கொண்ட சுமார் 1600க்கும் அதிகமான குடிநீர் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் குறித்த குடிநீர் விநியோகஸ்தர் மற்றும் குடிநீரை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment