ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சிரிய கிளர்ச்சியாளர்கள் எதிர்க் கிளர்ச்சிக் குழுவான அல்-–நுஸ்ராவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென் சிரியாவிலுள்ள அல்-–நுஸ்ரா கிளர்ச்சிக் குழுவின் தலைமையகத்தை தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திக் கைப்பற்றிய யொர்மொக் மட்ரையர்ஸ் கிளர்ச்சிப் படையணியைச் சேர்ந்தவர்கள் தம்மால் பிடிக்கப்பட்ட எதிர்க் கிளர்ச்சியாளர்களுக்கு இவ்வாறு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அல்-–நுஸ்ரா படையணியைச் சேர்ந்த இரு கிளர்ச்சியாளர்கள் உடல் கட்டப்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் முதுகுப் பகுதியை காண்பித்தவாறு மண்டியிட்டு அமர்ந்திருக்கப் பணிக்கப்படுகின்றனர்.
அதன்பின் அவர்களது உடல் மீது கொள்கலனொன்றிலிருந்து பெற்றோல் போன்று தென்படும் திரவம் ஊற்றப்படுகிறது.
அத்துடன் பிறிதொரு நபரின் உடலின் மீதும் இதே வழிமுறையைப் பின்பற்றி மேற்படி பெற்றோல் போன்று தென்படும் திரவம் ஊற்றப்படுகிறது.
அல்- நுஸ்ரா கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள் தமது எதிர்க் குழுவைச் சேர்ந்த கிளர்ச்சித் தலைவர்களை தாம் கொன்றுள்ளதாக அறிவித்ததற்கு ஒரு மாதம் கழித்தே இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment