எருவில்,
சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரி ழந்துள்ளார்.
மட்டக்களப்பு எருவில் பாரதிபுரத்தைச் சேர்ந்த ராஜன் (வயது 30) என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
ராஜன் ஏற்கனவே வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் இலங்கை வந்து மீண்டும் தொழில் நிமித்தம் 22 நாட்களுக்கு முன்பு தான் சவூதிக்கு சென்றிருந்தார்.
அங்கு சென்று தன்னுடன் தொழில் புரிபவர்களுடன் வேலை முடிந்து வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்ட வாகன விபத்தினால் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment