முன்னாள் பிரேதச சபை உறுப்பினர் ஏ.அப்துல் கபூர்
வில்பத்து விவகாரத்தில் தொடங்கி போதைப் பொருள் கடத்துகின்றனர் என நீண்டு கொண்டு செல்லும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விவகாரம் இனவாதிகளுக்கு இனிப்பாக இருந்த போதிலும் இவ்விடயத்தில் நல்லாட்சி அரசின் காவலர்கள் மௌனம் காப்பது கவலையளிக்கின்றது.
இவ்வாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அப்துல் கபூர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும், 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளினால் வடமாகாணத்தில் இருந்து உடுத்த உடையுடன் 24 மணித்தியால அவகாசத்தில் மனிதாபிமானமற்ற முறையில் வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் வாழ்ந்து வந்த முஸ்லீம்களின் ஒரு தொகுதி அகதிகள் தமது பூர்வீக கிராமங்களான கரடிகுளி, மறிச்சுக்கட்டி போன்ற பிரதேசங்களில் நீண்டு வளர்ந்த காடுகளை வெட்டி துப்புரவு செய்து குடியேறி வாழ விரும்பிய மக்களை கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆட்சியில் அன்றைய முக்கிய அமைச்சர்களில் ஒருவரான பசில்ராஜபக்ஷவுடன் றிஷாத் பதியுதீனிற்கு இருந்த நெருக்கம் காரணமாக குடியேற்றி வாழ வழிவகுத்த போது கைகட்டி வாய்பொத்தி அமைதியாக இருந்த இனவாதிகளும், சில ஊடகங்களும் அகதிகளுக்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருந்து வந்த றிஷாத் பதியுதீன் மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி வில்பத்து காட்டை சட்டவிரோதமான முறையில் அழித்து முஸ்லீம்களை குடியேற்றுகின்றார் என்ற கதையைப் பரப்பி அவரது அரசியல் வாழ்வை களங்கப்படுத்தத் தொடங்கிய நாடகம் இன்னும் தொடர்கதையாக தொடர்ந்து நீண்டு கொண்டு செல்வதை இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் காவலர்களான ஜனாதிபதியும், பிரதமரும் மௌனமாக இருந்து வருவதையிட்டு முஸ்லிம் சமூகம் கவலையும், வேதனையும் அடைந்துள்ளார்கள்.
இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விலங்கை உடைத்துக் கொண்டு முதலில் வெளியேறி முஸ்லிம் கட்சியின் தலைமை றிஷாத் பதியுதீன் தான் என்பதை இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும் எளிதாக மறந்துவிட முடியாது.
இந்த நல்லாட்சி அரசின் அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போது வில்பத்துவில் றிஷாத் பதியுதீன் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி முஸ்லீம்களை குடியேற்றவில்லை. முஸ்லீம்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இடங்களிலேயே மீண்டும் குடியேறியுள்ளார்கள். றிஷாத் பதியுதீன் ஒரு முஸ்லீம் என்பதற்காகத்தான் இவருடைய நற்பெயரை களங்கப்படுத்துகின்றனர் என்று ஒளிவு மறைவின்றி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் நான் சுற்றாடல் வனவளங்களுக்கு பொறுப்பானஅமைச்சராக இருந்துள்ளேன் அக்காலத்தில் விலபத்துவக்காடு சட்டவிரோதமான முறையில் அழிக்கப்படவுமில்லை.
முஸ்லீம்கள் குடியேற்றப்படவுமில்லை என்று கூறியிருந்தார். வடக்கு கிழக்கு வனபரிபாலன திணைக்களத்தினால் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட காணிகள் தவிர்ந்த வேறு காடுகள் அழிக்கப்பட்டு சுத்தப்படுத்தல் இடம்பெறவில்லை என வனபரிபாலன இலாகா தெரிவித்துள்ளது.
இதற்கெல்லாம் மேலாக வில்பத்துவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டிருந்தால் ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை நடாத்தி குற்றவாளிகளுக்கு அவர்களது தராதரம் பாராது தண்டணை வழங்க நடவடிக்கை எடுங்கள்.
0 comments:
Post a Comment