பாதுகாப்பு தகவல்கள் தொடர்பில் அத்துமீறி செயற்பட்ட இஸ்ரேலிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் யயிர் ரமத்தி மீதான குற்றச்சாட்டு குறித்து பாதுகாப்பு அமைச்சு மேலும் எந்த தகவலும் வெளியிடவில்லை. ரமத்தி அந்த பதவியில் கடந்து நான்கு ஆண்டுகளாக இருந்து வந்தார்.
இஸ்ரேல் ஏவுகணை திட்டத்தின் கீழேயே இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு அயன் டோம் முறை இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் மிக ரகசியமான தகவல்களை தனது சொந்த கணனியில் பதிவேற்றி வைத்ததே அவர் நீக்கப்பட காரணமாக இருந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து அது தொடர்பான துறையினர் விசாரணை நடத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தகவல் அளித்துள்ளது.
இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு முறைக்கு அமெரிக்கா பல நூறு மில்லியன் டொலர்களை செலவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment