ஆப்கானிஸ்தானில் 4 ஐ.எஸ். குழு உறுப்பினர்களின் தலைகளைத் துண்டித்து ஆப்கான் உள்ளூர் ஆயுத குழு ஒன்று பழிவாங்கியுள்ளது.
ஆப்கானின் கிழக்கு மாகாணமான நங்கார்காரில் ஆசின் மாவட்டத்தில் உள்ளூர்ஆயுத குழுக்களுக்கும் ஐ.எஸ். குழுவுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. ஐ.எஸ். இயக்கத்துடன் மோதி வரும் உள்ளுர் ஆயுதக் குழுவானது ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் ஹாஜி ஜாஹிரின் ஆதரவாளர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஹாஜி ஜாஹிரின் ஆயுத குழுவைச் சேர்ந்த 4 பேரை கடத்திச் சென்ற ஐ.எஸ். ஆயுததாரிகள் அவர்களது தலைகளைத் துண்டித்தனர். இதற்கு பதிலடியாக ஐ.எஸ். உறுப்பினர்கள் 4 பேரை கடத்தி வந்து அவர்களது தலைகளை துண்டித்து வீதியில் வீசியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹாஜி ஜாஹிர், அவர்கள் உங்கள் தலையை வெட்டும் போது நீங்க என்ன அவர்களுக்கு இனிப்பையா சமைத்து போடுவீர்கள்? என்று கேட்டுள்ளார். ஐ.எஸ். உறுப்பினர்களின் தலைகளை துண்டித்த சம்பவத்துக்கும் ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசுத் தரப்பும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment