சிகிச்சைக்காக சவூதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரொருவர் வைத்தியசாலை கட்டடத்திலிருந்து வீழ்ந்து இறந்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவமானது தற்கொலையா? அல்லது தவறி வீழ்ந்ததனால் ஏற்பட்ட மரணமா? அல்லது கொலையா என்பது தொட ர்பில் அந்த நாட்டு அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள் ளது.
30 வயதான இந்த நபரின் சடலம் சவூதி நாட்டின் பொது மக்கள் விசாரணைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சவூதி நாட்டிற்கு தொழில் வாய்ப்பிற்காக இலங்கையிலிருந்து 5 இலட்சத்து 50 பேர் வரை சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சவூதி நாட்டிற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் பணிப்பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளா வதாகவும் நேற்று முன்தினம் கூட சவூதி நாட்டின் ரியாத் நகரிலிருந்து இலங்கைப் பணிப் பெண்ணொருவர் பலவந்தமாக ஆணியை விழுங்கிய நிலையில் நாட்டிற்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
|
About infonews1st.blogspot.com
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment