காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் தாயொருவர் தனது 14 நாட்களேயான பெண் சிசுவை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காசல் வைத்தியசாலையின் 10 ஆவது வார்ட் தொகுதியில்
(வோர்ட்) காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெறவந்த 34 வயது தாய் ஒருவரே உடன் இருந்த தனது குழந்தையையை இவ்வாறு கொலைச் செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன் தினம் 10.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தை தொடர்ந்து அந்த தாய் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த தாய் தனது பெண் குழந்தையை ஏன் இவ்வாறு கொலை செய்தார் என்பது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மகப்பேற்றின் பின்னர் தாய் பாலூட்டும்போது ஏற்படும் ஒருவகையான மன அழுத்த நிலைமையினால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
மாதிவல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான பெண்னொருவர் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அவருடன் அவரது 14 நாட்களான சிசுவும் தங்கவைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று முன் தினம் காலை வேளையிலும் வழமையான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில் காலை 10.10 மணியளவில் அப்பெண்ணின் குழந்தை இறந்த நிலையில் உள்ளதை தாதியர்கள் அவதானித்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை உடனடியாக பொரளை பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது தானே குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தாய் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் புதுக்கடை பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த தாய் மேலதிக சிகிச்சைகளுக்காக சிறைக் காவலரின் கீழ் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 5,3 வயதுகளில் இரு ஆண் பிள்ளைகள் இருப்பதாக கூறும் பொலிஸார் கணவன் ஆசிரியராக தொழில் புரிபவர் எனவும் அப்பெண் தொழிலுக்கு செல்பவர் அல்ல எனவும் தெரிவித்தனர்.
|
About infonews1st.blogspot.com
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment