புற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக தேசிய கொள்கையொன்றும் மூலோபாயத்திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு தெரிவித்தது. தொற்றா நோய்களிடையே கூடுதலான பாதிப்புள்ள புற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கொள்கைத் திட்டம் சுகாதார போசாக்கு அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் இன்று (29)வெளியிட்டு வைக்கப்படுகிறது.
புற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஜந்து அம்ச மூலோபாயங்கள் இந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடுக்கக் கூடிய புற்று நோயை தடுத்தல், முன்கூட்டி அடையாளங் காணக்கூடிய புற்று நோயை அடையாளங்காணுதல், புற்று நோயை உறுதியாக அறிதல்,உரிய சிகிச்சை வழங்குதல்,புற்று நோயாளிகளுக்கு புனர்வாழ்வு வழங்குதல் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குதல், புற்று நோயில் இருந்து மீளுதல்.
புற்று நோய் கட்டுப்பாட்டுக்காக பயிற்றப்பட்ட மனித வளத்தை தயாரித்தல், புற்று நோய் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் என்பனவும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்ட செயற்பாட்டுத்திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
0 comments:
Post a Comment