தெற்கு கடற் பகுதியில் படகொன்று விபத்துக்குள்ளானதில் மீனவர்ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த படகில் சென்ற மூன்று மீனவர்களை மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
விபத்துக்குள்ளான இந்த மீன்பிடிப்படகு கடந்த 25ம் திகதி தேவேந்திரமுனை(தெவுந்தரை) கடற்பகுதியில் இருந்து 5 மீனவர்களுடன் கடலுக்கு சென்றுள்ளது.
ஆழ் கடலில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்றில் சிக்கி அந்தப்படகு நேற்று பிற்பகல் விபத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், பேருவளை பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்க படகில் சென்ற மீனவர்கள் குழுவொன்று விபத்துக்குள்ளான படகில் இருந்த மூவரை காப்பாற்றியுள்ளனர். எவ்வாறாயினும் மற்றொரு மீனவர் காணாமல் போயு ள்ளதுடன் அவரை தேடும் பணிகள் இடம்பெறுகின்றன.
விபத்துக்குள்ளான படகில் இருந்து காப்பாற்றப்பட்ட மீனவர்களை தெவுந்தரை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
0 comments:
Post a Comment