பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீரர் முகமது அமீர் ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் சிக்கி தடைக்கு உள்ளனார். தடை முடிந்து தற்போது முதல்தர போட்டிகளில் விளையாடி வருகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்த முகமது ஹபீஸ்இ அசார்அலி ஆகியோர் சமாதானத்திற்கு பின் முகாமில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பயிற்சி முகாமில் சக வீரர்களிடம் முகமது அமீர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார். அவரை மற்ற வீரர்கள் கட்டித்தழுவி ஆறுதல் படுத்தி அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டனர்.
0 comments:
Post a Comment