உண்மையின் உதயம்

infonews1st

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை

நெல்லை மற்றும் தூத்­துக்­குடி மாவட்­ட­களில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கின்­ற­மை­யினால் மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்­றாக ஸ்தம்­பித்­துள்­ளது.
நெல்லை மாவட்­டத்தில் நேற்­று­முன்­தினம் மாலை முதல் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கி­றது. தூத்­துக்­குடி மாவட்­டத்­திலும் நேற்று காலை முதல் கன­மழை பெய்து வரு­கி­றது. தாழ்­வான பகு­தி­களில் குடி­யி­ருப்­பு­க­ளுக்குள் வெள்­ளநீர் புகுந்­துள்­ளதால் பொது­மக்கள் கடும் சிர­மத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளனர்.
இலட்­சத்­தீவு அருகே நிலவும் மேல­டுக்கு சுழற்சி கார­ண­மாக கன­மழை தொடரும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமி­ழ­கத்தின் ஒரு சில இடங்­களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அத்­தோடு குமரி, நெல்லை, தூத்­து­கு­டியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்­ளா­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் நெல்லை, தூத்­துக்­குடி மாவட்­டங்­களில் பரு­வ­மழை மீண்டும் தீவி­ர­ம­டைய தொடங்­கி­யுள்­ளது. தூத்­துக்­கு­டியில் பெய்த கன­மழை கார­ண­மாக கோரம்­பள்ளம் குளம் நிரம்பி, 24 கண் மடை­களும் திறந்து விடப்­பட்­டன. தொடர்­மழை கார­ண­மாக வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. தாழ்­வான பகு­தி­களில் உள்ள குடி­யி­ருப்பு பகு­திகள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.
மேலும், நெல்­லையில் தொடர்ந்து கன­மழை பெய்­து வருவதனால். குற்­றாலம் பிர­தான அரு­வியில் குளிக்க பொது­மக்­க­ளுக்கு தடை விதிக்கப்
பட்டுள்ளது. இதேவேளை நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்
களில் இன்றும் நாளையும் கன
மழை பெய்யும் என்று வானி லை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share on Google Plus

About infonews1st.blogspot.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment