தம்புள்ள நகர பிரதான சந்தியிலுள்ள மணிக்கூண்டு கோபுரம் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிக காலமாக செயலிழந்துள்ள நிலையில் அம்மணிக்கூண்டு கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதி மிக்க பற்றரி தற்போது மாயமாகியிருப்பதாக தம்புள்ள மாநகர சபையின் ஆணையாளர் திருமதி ஆத்மா டி. ஜயரத்ன தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் செயலிழந்துள்ள நிலையில் தம்புள்ள மணிக்கூண்டு கோபுரத்தின் திருத்த வேலைகளை பொறுப்பேற்றிருந்த தனியார் நிறுவனமொன்று அந்நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்ததையடுத்து தம்புள்ள மாநகர மணிக்கூண்டை இயங்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில், மாநகர சபை நிர்வாகமும் கரிசனை காட்டியதாகத் தெரியவில்லை.
கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியும், திருகோணமலை, கொழும் ஏ 6 பிரதான வீதியும் சங்கமிக்கும் கேந்திர நிலையமான தம்புள்ள மாநகரத்தின் மத்தியில் மிகவும் அலங்காரமான தோற்றத்துடன் விளங்கும் இம்மணிக்கூண்டு கோபுர கடிகாரம் செயலிழந்துள்ளமை நகரத்தின் வனப்பை சோபை இழக்கச் செய்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment